பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
திருமணத்திற்கு பிறகு தொடர்ச்சியாக சினிமா, சீரியல் என்று நடித்து வந்தபோதும் பாகுபலி, பாகுபலி-2 படங்களுக்குப்பிறகு ரம்யா கிருஷ்ணனின் மார்க்கெட் சூடுபிடித்தது. தற்போது கமலின் சபாஷ் நாயுடு மற்றும் தானா சேர்ந்த கூட்டம், பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கில் பால கிருஷ்ணுடு உள்பட சில படங்களில் நடித்து வருபவர், சைலஜா ரெட்டி அல்லுடு என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். மாருதி இயக்கும் இந்த படம் காமெடி கலந்த கதையில் உருவாகிறது. இந்த படத்தில் சைலஜா ரெட்டி என்ற லீடு ரோலில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறாராம். அதனால் அவரைச்சுற்றியே மொத்த கதையும் பின்னப்பட்டிருக்கிறதாம். அதோடு, சித்தாராவும் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.