பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
'வீரம், வேதாளம், விவேகம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. 'விவேகம்' படத்தைத் தயாரித்த சத்யஜோதி நிறுவனமே இந்தப் புதிய படத்தையும் தயாரிக்க உள்ளதாம். அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்கிறார்கள்.
'விவேகம்' படம் தோல்வியடைந்த பிறகு அஜித் ரசிகர்களே, சிவா இயக்கத்தில், அஜித் மீண்டும் நடிப்பதை விரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் 'விவேகம்' தோல்விக்காக மனம் தரள வேண்டாம் என சிவாவுக்கு ஆறுதல் சொன்ன அஜித், 'வீரம், வேதாளம்' ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்ததால் சிவாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த முறை அஜித்திற்கு 'சால்ட் அன்ட் பெப்பர்' தோற்றம் இல்லாமல் அவரை மிகவும் இளமையாகக் காட்ட வேண்டும் என சிவா முடிவெடுத்திருக்கிறாராம். புதிய படத்தின் திரைக்கதையை மேலும் மெருகேற்ற தொடர்ந்து விவாதத்திலும் இருக்கிறார்களாம். யாரும் விமர்சனத்தில் எந்த கிண்டலும் செய்ய முடியாதபடி சிறந்த படத்தைக் கொடுக்க படக்குழுவினர் மிகவும் கவனத்துடன் ஸ்கிரிப்ட்டைத் தயார் செய்து வருவதாகத் தகவல்.