ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் 'குப்பத்துராஜா'. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் பாலக் லால்வானி என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் இப்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் நடிகர் தனுஷ் வெளியிட்டார். பார்த்திபன், பூனம் பஜ்வா ஆகியோரும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். குப்பத்து ராஜா படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் மாதம் வெளியிட உள்ளனர்.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் நடித்துள்ள 'வேலைக்காரன்' படமும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் நடித்த படங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருப்பதால் இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகை ரசிகர்களுக்கு ஸ்பெஷல்தான்.
வேலைக்காரன் படத்தில் சேரி பகுதியில் வசிப்பவராக நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். குப்பத்து ராஜா படத்திலோ குப்பத்து இளைஞனாக நடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.