ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
ஜெயம் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் வேலைக்காரன். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பாடல்காட்சிகளை படமாக்க விரைவில் வெளிநாடு செல்ல இருக்கின்றனர்.
வேலைக்காரன் படத்தில் கமிட்டானபோது தனி ஒருவன் படத்தின் எடிட்டர் வேண்டும் என்று கேட்டார் ஜெயம் ராஜா. தயாரிப்பாளர் தரப்போ விவேக் ஹர்ஷனை எடிட்டராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கறாராக சொன்னதால் வேறுவழியில்லாமல் உடன்பட்டாராம் ஜெயம் ராஜா.
வேலைக்காரன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதிலிருந்து எடிட்டராக பணிபுரிந்து வந்தார் விவேக் ஹர்ஷன். ஆனால் இயக்குநருக்கும், எடிட்டருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக தற்போது விவேக் மாற்றப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதில் வேறு ஒருவர் எடிட்டராக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.