Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தி.மு.க., பிரசார பீரங்கியாகிறாரா நடிகை கஸ்தூரி...?

27 அக், 2017 - 14:15 IST
எழுத்தின் அளவு:
Actress-Kasthuri-may-joints-in-DMK

திடீர் என்று அரசியல் ஆர்வம் கொண்டு, அரசியல் ரீதியிலான கருத்துக்களை அள்ளி விடுவதில் கில்லாடி நடிகை கஸ்தூரி. அவர், நடிகர் ரஜினிக்கு எதிராக கருத்துச் சொல்லி, ரஜினியின் அரசியல் ஆர்வத்தை குலைக்கும் வகையில் பேசி, ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பை சமீபத்தில் சந்தித்தார்.

பின், ஒரு சில நாட்களில், நடிகர் ரஜினியை சந்தித்துப் பேசினார். ரஜினியின் அரசியல் ஆர்வம் தமிழகத்துக்குத் தேவையானது; அவர் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கருத்துச் சொன்னார்.

நடிகர் கமல் எப்படி டுவிட்டர் மூலம் அரசியல் கருத்துக்களை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறாரோ, அதேபோல, நடிகை கஸ்தூரியும் டுவிட்டர் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அரசியல் கருத்துக்களை தெரிவிப்பதில் முன்னோடியாக இருந்து வருகிறார். அவரை, தி.மு.க.,வுக்கு ஆதரவாக கொண்டு வர வேண்டும்; நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் விஜய் ஆகியோர் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவரை, தி.மு.க.,வுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட வைக்க வேண்டும் என்ற எண்ணம், அக்கட்சியின் மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து, தி.மு.க., தரப்பில் நடிகை கஸ்தூரியை ரகசியமாக அக்கட்சியின் சில பிரமுகர்கள் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. முதலில் அக்கட்சியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள தயக்கம் காட்டிப் பேசிய கஸ்தூரி, பின், அதற்கு ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. அடுத்தடுத்த கட்டங்களிலும் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தால், நடிகை கஸ்தூரி, தி.மு.க.,வுக்கு ஆதரவாக மேடைகளில் தீவிரமாக முழங்கக்கூடும் என, அக்கட்சியின் முன்னணி பிரமுகர் ஒருவர் கூறினார்.

கடந்த காலங்களில் சட்டசபை மற்றும் பார்லிமெண்ட் தேர்தல்களில், தி.மு.க.,வுக்கு ஆதராக நடிகை குஷ்பு எப்படி பிரசார பீரங்கியாக களத்தில் செயல்பட்டாரோ, அதேப்போல, தற்போது நடிகை கஸ்தூரியை பயன்படுத்திக் கொள்ள தி.மு.க,, தரப்பு திட்டமிடுகிறது.

Advertisement
கருத்துகள் (37) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் படத்திற்கு மலையாள பட ஒளிப்பதிவாளர்?விஜய் படத்திற்கு மலையாள பட ... சிபிராஜின் நம்பிக்கை நனவாகுமா? சிபிராஜின் நம்பிக்கை நனவாகுமா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (37)

R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
28 அக், 2017 - 08:51 Report Abuse
R.BALAMURUGESAN எல்லாம் பொய்... எந்த திமுக.,வினர் யார் சந்தித்தார்கள்... வர வர நன்றாக பொய் செய்திகளை எழுத ஆரம்பித்துவிட்டார்கள்...
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
28 அக், 2017 - 08:18 Report Abuse
Srinivasan Kannaiya மினுமினுப்பு குறைந்து விட்டால்.. இதுதான்வழி...
Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
28 அக், 2017 - 07:57 Report Abuse
தேச நேசன் கஸ்தூரி பாத்தும்மா... ஏற்கனவே அந்த டிவி அறிவிப்பாளர் பெண்ணுக்கு நடந்தது கஸ்தூரிக்குத் தெரியாது போலிருக்கு
Rate this:
Vaidhyanathan Sankar - chennai,இந்தியா
28 அக், 2017 - 07:27 Report Abuse
Vaidhyanathan Sankar விநாச காலே விபரீத புத்தி
Rate this:
28 அக், 2017 - 04:02 Report Abuse
ArulKrish lot of case in this case (Kasthuri)
Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  Tamil New Film Monster
  • மான்ஸ்டர்
  • நடிகர் : எஸ்.ஜே.சூர்யா
  • நடிகை : பிரியா பவானி சங்கர்
  • இயக்குனர் :நெல்சன் வெங்கடேசன்
  Tamil New Film Ayogya
  • அயோக்யா
  • நடிகர் : விஷால்
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :வெங்கட் மோகன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in