அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
திரைப்படம் எடுப்பவர்களுக்கு தற்போது இலவசமான விளம்பரமாக அமைவது யு டியூபில் வெளியிடப்படும் வீடியோக்கள் தான். அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கிறதோ இல்லையோ, அந்த வீடியோக்களை வெளியிடும் ஆடியோ நிறுவனங்களுக்கு நல்ல வரவேற்பும், வரவும் கிடைக்கிறது.
'மெர்சல்' திரைப்படத்திற்காக இதுவரை பத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. டீசர், பாடல் டீசர், படத்திற்கான புரோமோ, பாடல் வரிகள் வீடியோ என ஆகஸ்ட் மாதத்திலிருந்தே இந்த யு டியுப் அதிர ஆரம்பமாகியது. படத்தின் டீசர் வெளிவந்தும் குறுகிய நேரத்தில் அதிகப் பார்வைகள், அதிக லைக்குகள் பெற்று உலக சாதனையையும் படைத்தது.
இந்த மொத்த வீடியோக்களும் தற்போது 10 கோடி பார்வைகளைக் கடந்து மேலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளன. இந்த வீடியோக்களில் அதிக பட்சமாக 'மெர்சல்' டீசருக்கு 3 கோடியே 25 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. அதற்கு அடுத்து 'ஆளப் போறான்' பாடல் வரிகள் வீடியோ 2 கோடியே 40 லட்சம் பார்வைகளையும், 'மெர்சல் அரசன்' பாடல் வரிகள் வீடியோ 1 கோடியே 3 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளன. மற்ற இரண்டு பாடல்களான 'மாச்சோ, நீதானே' பாடல் வரிகள் வீடியோ 1 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கின்றன.
நேற்று வெளியான 'மெர்சல்' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'அதிரிந்தி' டிரைலர் 12 லட்சம் பார்வைகளைப் பெற்று தற்போது யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
'மெர்சல்' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளதாலும், படம் தற்போது பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாலும் இந்தப் பார்வைகளின் எண்ணிக்கை மேலும் அதிமாக வாய்ப்புள்ளது.