பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
அடல்ட் கண்டன்ட் என்கிற ஆபாசப்படமாக அண்மையில் வெளிவந்த படம் - 'ஹர ஹர மகாதேவகி'. இந்தப் படத்தின் கமர்ஷியல் வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயகுமாரும், கௌதம் கார்த்திக்கும் இணையும் படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'.
'ஸ்டுடியோ கிரீன்' ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக்குடன் 'மொட்டை' ராஜேந்திரன், கருணாகரன், ரவி மரியா முதலானோர் நடிக்க, இப்படத்திற்கான கதாநாயகி தேர்வு நடந்து வந்தது.
இந்நிலையில் சந்தானத்துடன் 'சக்க போடு போடு ராஜா' படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் வைபவி சாண்டில்யா 'இருட்டு அறை முரட்டு குத்து'வில் கௌதம் கார்த்திக்குக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
அடல்ட் கண்டன்ட் படங்களில் கதாநாயகியாக நடிப்பவர்களுக்கு தமிழ் தெரிந்தால் நடிக்க மறுத்து விடுவதால் தமிழ் தெரியாத கதாநாயகியான நிக்கி கல்ராணியை கமிட் பண்ணினார்கள். அதே பாணியில் இந்தப்படத்துக்கு வைபவி சாண்டில்யாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அடல்ட் காமெடி படமாக உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு பாலமுரளி பாலா இசை அமைக்கிறார். தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார்.