தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ள நிலையில், வருகிற நவ., 7-ம் தேதி அவரது பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பு அரசியல் கட்சியாக இருக்கும் என உறுதியாக நம்பப்பட்டது. ஆனால் அரசியல் கட்சி அறிவிக்கபோவதில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கமல், தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர் 7, இயக்கத்தார் கூடுவது எம் பல வருட வழக்கம். பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும் என்று கூறியுள்ளார்.
மொபைல் ஆப் வெளியீடு : இதனிடையே, நவ., 7-ம் தேதி, தனது இயக்கத்திற்காக தனி மொபைல் 'ஆப்'சை அன்று வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், நமது இயக்கத்துடன் சேர்ந்து பணி செய்யப் பல இயக்கங்கள் தயாராக உள்ளன. செய்வார்கள் எனக் காத்திருந்தது போதும். நாம் தொடர்பில் இருக்கவும், நம் இயக்கத்தார் மக்களுடனும், என்னுடனும் தொடர்பு கொள்ளவும் சில ஏற்பாடுகள் நடக்கின்றன. அதற்காக நவம்பர் 7 ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளேன். இனியும் தாமதியாது கூடுவோம். பட்டிமன்றம் போட்டுப் பேச அல்ல; செயல் திட்டங்கள் தீட்ட என்று கூறியிருந்தார்.