பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தமிழ் மற்றும் மலையாள படங்களில் பிரபலமாக திகழும் நடிகை பார்வதி, இப்போது பாலிவுட்டிலும் களமிறங்கி உள்ளார். இர்பான் கான் நடித்துள்ள காரி காரிப் சிங்கிள் படத்தில் இவர் தான் ஹீரோயின். தனுஜா சந்திரா இயக்கியிருக்கிறார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இப்படத்திற்காக உடல் எடையை சற்று அதிகப்படுத்தியும் நடித்துள்ளார் பார்வதி.
காரிப் காரிப் சிங்கிள் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இர்பான், பார்வதியை வெகுவாக புகழ்ந்தார். பார்வதி மிகச்சிறந்த நடிகை. அவருக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதை பார்க்கும்போது எனக்கே சற்று பொறாமையாக உள்ளது. அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை பார்க்கும் போது இந்தப்படத்தில் நான் இருக்கிறேனா, இல்லையா என்று கூட தெரியவில்லை என்றார்.
காரிப் காரிப் சிங்கிள் படம் வருகிற நவ., 10-ம் தேதி ரிலீஸாக உள்ளது.