Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யு டியூபில் இலவசமாக 'பாகுபலி 2'

26 அக், 2017 - 14:53 IST
எழுத்தின் அளவு:
Baahubali-2-free-in-You-tube

இந்தியாவில் அதிக வசூலைக் குவித்துள்ள படம் என்ற பெருமையைப் பெற்ற 'பாகுபலி 2' படத்தில் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை 'நெட்பிளிக்ஸ்' நிறுவனத்திற்கு சமார் 25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.

ஆனால், 'பாகுபலி 2' படத்தின் தெலுங்கு மொழிப் படம் யு டியூபில் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது. அதை எந்தக் கட்டணமும் இன்றி இலவசமாகப் பார்க்கலாம். இந்த ஒரு வாரத்தில் அந்தப் படத்திற்கு 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளது.

தெலுங்கில் வெளியான 'பாகுபலி 2' யு டியூபில் இலவசமாகப் பார்க்க வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகியவற்றை 'நெட்பிளிக்ஸ்' இணையதளத்தில் கட்டணம் செலுத்தினால் மட்டுமே பார்க்க முடியும். தெலுங்குத் திரையுலகத்திற்குப் பெருமை சேர்த்த படம் 'பாகுபலி 2' என்பதால் அதை தெலுங்கு ரசிகர்களுக்காக யு டியூபில் இலவசமாகப் பார்க்கும் வசதியை தயாரிப்பாளர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.

தெலுங்கு அல்லாத மற்ற மூன்று மொழிப் படங்களின் டிஜிட்டல் உரிமை 25 கோடிக்கு விற்கப்பட்டது என்றால் அது மிகப் பெரிய விலை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீப காலமாக சாட்டிலைட் உரிமைகளை விட டிஜிட்டல் உரிமைகள் நல்ல விலைக்கு விற்கப்படுவதாகத் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதனால் தான், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் டிஜிட்டல் உரிமைகளை விற்க ஆலோசனை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in