தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கபாலியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள படம் காலா. கபாலியைப் போலவே இந்த படமும் கேங்ஸ்டர் கதையில் உருவாகியிருக்கிறது. மும்பை தாராவியில் பகுதியில் வாழ்ந்த தமிழர் ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த கதை எடுக்கப்பட்டுள்ளது. மும்பையின் தாராவி பகுதியிலும், சென்னையிலும் செட் போட்டு படப்பிடிப்பு நடத்தினர். தற்போது காலா படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் துவங்கி உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தின் இறுதிகட்ட பணிகளும் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில், 2018ல் ஜனவரியில் அப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், காலா படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் காலா வெளியாகும் என்று தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.