அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து இப்போது தெலுங்கிலும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு கன்னடத்திலும் நடிக்கும் அவருக்கு, தமிழில் தனுஷின் கொடி படத்திற்கு பிறகு வாய்ப்புகள் இல்லை.
இந்த நிலையில், தீரன் அதிகாரம் ஒன்று படத்தை அடுத்து பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் நடிக்கிறார் அனுபமா. இந்த படத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்து பிரபலமாகி பின்னர் மேயாதமான் படத்தில் நாயகியாக நடித்த பிரியா பவானி சங்கரும் நடிப்பதாக இருக்கும் நிலையில், இரண்டு நாயகிகளில் ஒருவராக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.
கிராமத்து கதையில் உருவாகும் இந்த படத்திற்கு பிறகு தமிழில் நிலையான இடத்தை பிடிக்கும் முயற்சியாக தற்போது மேலும் சில புதிய படங்களில் நடிப்பது சம்பந்தமாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் அனுபமா.