ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரோமியோ ஜூலியட் படத்தை அடுத்து ஜெயம்ரவி - ஹன்சிகா மீண்டும் இணைந்த படம் போகன். இந்த படத்தில் தனிஒருவனைத் தொடர்ந்து மீண்டும் ஜெயம் ரவியுடன் வில்லனாக நடித்திருந்தார் அரவிந்த்சாமி. இந்த படம் தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் ரீ-மேக் செய்யப்படுகிறது. இதில் வில்லனாக அரவிந்த்சாமி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது வேறு நடிகர்களிடம் பேசி வருகிறார்கள்.
மேலும், பிரபுதேவாவுடன் குலேபகாவலி படத்தில் நடித்து வரும் ஹன்சிகாவிற்கு வேறு புதிய படங்கள் இல்லாத நிலையில், போகன் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பதற்கு கடும் முயற்சி எடுத்து வருகிறார். இந்த படத்தில் மெட்ராஸ் கேத்ரின் தெரசா நடிப்பார் என்று கூறப்பட்டபோதும், இப்போது ஹன்சிகா அந்த படத்தை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார். தற்போது ஒரு படத்தில் நடித்து வரும் ரவிதேஜா, அந்த படத்தை முடித்ததும் போகன் ரீமேக்கை தொடங்குகிறார்.