டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தியத் திரையுலகில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களும் பெரும் வசூல் சாதனை புரிந்தன. அதிலும் பாகுபலி 2 படம் பல நேரடி ஹிந்திப் படங்களின் வசூலை முறியடித்து புதிய சாதனையைப் படைத்தது. டிவியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒளிபரப்பான போது அதன் ரேட்டிங்கிலும் பெரிய சாதனையைப் படைத்தது.
பாகுபலி 2 படத்தின் சாதனை ஹிந்தித் திரையுலகத்திற்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தெலுங்கிலிருந்து ஹிந்திக்கு டப்பிங் ஆகி வந்த ஒரு படம் இவ்வளவு சாதனையைப் படைப்பதா எனப் பலரும் அதிர்ச்சியுற்றார்கள். இப்போது பத்மாவதி ஹிந்திப் படம் மூலம் பாகுபலியின் சாதனையை முறியடிக்க முடியும் என நம்புகிறார்கள்.
ஹிந்தித் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கம், இசையமைப்பில், தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங் மற்றும் பலர் நடித்துள்ள பத்மாவதி படத்தின் டிரைலர் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது. இதுவரை இந்த டிரைலருக்கு 3 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளது.
நேற்று தீபிகா படுகோனே அழகாக நடனமாடும் கூமார்... பாடலின் வீடியோவும் யு டியூபில் வெளியிடப்பட்டது. அதற்குள் அந்த பாடலுக்கு 90 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. அழகான நட்சத்திரங்கள், பிரம்மாண்டமான அரங்கம், சண்டைக் காட்சிகள் என பாகுபலி படத்திற்கு சரியான போட்டியாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக பாலிவுட்டினர் கருதுகிறார்கள்.
இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். டிசம்பர் 1ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.