ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சித்தார்த், ஆன்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அவள்'. சித்தார்த்தின் நண்பர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ள இந்த படத்தை ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக உருவாக்கியிருக்கின்றனர். 'Viacom 18' என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிக்க சம்பளமாக அவள் படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பெற்றுள்ளார் சித்தார்த்.
அதன்படி அவள் என்ற பெயரில் தமிழ்ப்படுத்திய சித்தார்த், தனது ' Etaki Entertainment' நிறுவனம் மூலம் தயரித்துள்ளார். இந்த படத்தை நவம்பர் 3-ம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் 'அவள்' திரைப்படத்தின் தமிழக விநியோக உரிமையை டிரைடண்ட் ஆர்ட்ஸ் வாங்கியுள்ளது.
சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று, வெற்றிப் படமாக அமைந்த 'விக்ரம் வேதா' படத்தை தொடர்ந்து டிரைடண்ட் ஆர்ட்ஸ் ' நிறுவனம் அவள் படத்தை வெளியிடவிருக்கிறது.