'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கமர்ஷியல் ரீதியாக படங்களை இயக்கி வெற்றி பெறுவர் இயக்குநர் ரோகித் ஷெட்டி. இவருடைய இயக்கத்தில் வெளியான கோல்மால் படங்களின் வரிசையில் நான்காம் பாகமாக கோல்மால் அகைன் தீபாவளி விருந்தாக வெளியாகி உள்ளது. அஜய் தேவ்கன், தபு, பரிணிதி சோப்ரா, அர்ஷத் வர்சி, பிரகாஷ் ராஜ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. படதயாரிப்பு, விளம்பரம் உள்ளிட்ட செலவுகள் உட்பட ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரான கோல்மால் அகைன் படம் வெளியான நான்கு நாட்களிலேயே ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்து இருக்கிறது. இதனால் படக்குழு மிகழ்ச்சியில் உள்ளது.