மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மறைந்த மலையாள இயக்குநர் ஐவி சசிக்கு, நடிகர் கமல்ஹாசன், டுவிட்டரில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். 100-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய மலையாள சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகை சீமாவின் கணவருமான ஐவி சசி (வயது 69) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தன்னை வைத்து அலாவுதீனும் அற்புதவிளக்கும், குரு என இரண்டு படங்களை இயக்கிய ஐவி சசிக்கு, கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், "நெடுங்கால நண்பரும், இணையில்லா சினிமா தொழில் விற்பன்னருமான ஐ.வி.சசி காலமானார். என் சகோதரி சீமா சசிக்கும், குடும்பத்தாருக்கும் அன்பும் அனுதாபமும்" என்று குறிப்பிட்டுள்ளார்.