‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நானும் ரெளடிதான் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். சூர்யா நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், செந்தில், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், சரண்யா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமைய்யா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு மேல... என்ற பாடலின் டீசர் அனிருத்தின் பிறந்த நாளான அக்டோபர் 16-ந்தேதி வெளியானது. அதிரடியான டியூனில் உருவான அந்த பாடல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. இந்த நிலையில், அந்த சொடக்கு பாடலின் முழு வடிவம் அக்டோபர் 26-ந்தேதி வெளியாகிறது. இந்த தகவலை அனிருத் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.