இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? |
ராஜமவுலி இயக்கத்தில் நடித்த பாகுபலி-2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நாயகனாக நடித்து வரும் படம் சாஹோ. சுஜீத் இயக்கி வரும் இந்த படத்தில் ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடித்து வருகிறார். நான்கு மொழிகளில் வெளியாகயிருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் பிரபாஸின் பிறந்த நாளான நேற்று காலை வெளியானது. தனது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக இந்த பர்ஸ்ட்லுக் வெளியிடப்படுவதாக அறிவித்திருந்தார் பிரபாஸ்.
சாஹோ பர்ஸ்ட் லுக்கை அவரது ரசிகர்கள் இணையதளங்களில் பெரிய அளவில் டிரன்டிங் செய்துள்ளனர். இந்த நிலையில், பிரபாஸின் சாஹோ முதல் தோற்றம் குறித்து பாகுபலி டைரக்டர் ராஜமவுலி கூறுகையில், சாஹோ பர்ஸ்ட் லுக் சுவராஸ்யமாக உள்ளது. முகமூடி அணிந்த நிலையில் பிரபாஸ் காட்சி தருவது, கிரைம் பின்னணி கதை என்பதை உணர்த்துகிறது. அதோடு இதில் பிரபாஸ் ரொம்ப ஸ்டைலிஷாக காட்சி கொடுக்கிறார் என்று கூறியுள்ளார்.