டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'கபாலி', 'வேலையில்லா பட்டதாரி' என பெரிய பட்ஜெட் படங்களைத் தொடர்ந்து 'கலைப்புலி' எஸ்.தாணு தயாரிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'இந்திரஜித்'. கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை 'கலைப்புலி' எஸ்.தாணுவின் இளைய மகனும், 'சக்கரக்கட்டி' படத்தை இயக்கியவருமான கலாபிரபு இயக்கியுள்ளார்.
கபாலி படத்துக்கு முன்பே அதாவது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்திரஜித் படத்தின் படப்படிப்பு அவ்வப்போது நடைபெற்று வந்தது.
கடந்த ஆண்டு முழுப்படமும் ரெடியாகிவிட்ட நிலையில் இந்திரஜித் படத்தை வெளியிட சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் தாணு.
கெளதம் கார்த்திக் நடித்த இவன் தந்திரன் படத்தை அடுத்து சமீபத்தில் வெளியான ஹர ஹர மகாதேவகி படமும் கமர்ஷியலாக வெற்றியடைந்ததால் இதுதான் சரியான நேரம் என்று முடிவு செய்து இந்திரஜித் படத்தை நவம்பர் 3 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்.
அதிரடி ஆக்ஷன் அட்வெஞ்சர் ரக படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் கௌதம் கார்த்திக்குடன் கதாநாயகியாக அர்ஷிதா ஷெட்டி நடித்துள்ளார். வில்லனாக 'பில்லா-2', 'மீகாமன்' ஆகிய படங்களில் நடித்துள்ள சுதன்ஷு பாண்டே நடித்துள்ளார்.