திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள 2.0 படத்தின் இசை வெளியீடு வரும் 27ம் தேதி துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்த உள்ள இந்த நிகழ்வுக்காக பல லட்ச ரூபாய்க்கு டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்கப்பட்டுள்ளன. ஆயிரக் கணக்கான ரசிகர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த், கமல்ஹாசன் நெருங்கிய நண்பர்கள் என்பதாலும், படத்தின் இயக்குனர் ஷங்கர், தயாரிப்பு நிறுவனமான லைக்கா ஆகியோருக்கும் கமல்ஹாசன் நெருக்கமானவர் என்பதாலும் அவர் கலந்து கொள்வது உறுதி என்கிறார்கள். கமல்ஹாசனைத் தவிர வேறு யாரும் இந்த நிகழ்ச்சிக்குப் பொருத்தமாக இருக்க முடியாது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
எந்திரன் படத்தில் முதலில் கமல்ஹாசன்தான நாயகனாக நடிக்க வேண்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படம் வெளியாவதற்கு முன்பே ரோபோ என்ற பெயரில் கமல்ஹாசன் நடிக்க உருவாக வேண்டிய படம், பின்னர் கைவிடப்பட்டது.