தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மம்முட்டிக்கு கடந்த சில வருடங்களாகவே ஒரு மனவருத்தம் இருந்து வருகிறது. தனது படம் எதையும் கடந்த சில வருடங்களாக கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது என்கிற வருத்தம் தான் அது. மம்முட்டி-நயன்தாரா இணைந்து நடித்த 'புதிய நியமம்' படம் கடந்த 2015ல் கிறிஸ்துமஸ் தினத்தன்றே இந்தப்படம் வெளியாக திட்டமிடப்பட்டது.. ஆனால் சென்னையில் பெய்த மழையால் அங்கே நடைபெற்ற போஸ்ட் புரொடக்சன் பணிகள் பாதிக்கப்பட்டதால் தாமதமாக 2016 ஜன-29ல் ரிலீசானது. அதேபோல ஹனீப் அதேனி என்கிற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் மம்முட்டி நடித்த 'தி கிரேட் பாதர்' கடந்த 2016ல் கிறிஸ்துமஸ் ரிலீஸாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விநியோகஸ்தர் ஸ்ட்ரைக் காரணமாக தள்ளிப்போய் இந்த வருடம் மார்ச் இறுதியில் தான் ரிலீஸானது
ஆனால் இந்த முறை மம்முட்டியின் மனவருத்தத்தை போக்கும் விதமாக மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'ஸ்ட்ரீட்லைட்ஸ்' படத்தை வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸ் செய்வதை இப்போதே உறுதிப்படுத்திவிட்டார்கள்.. இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மம்முட்டி.. க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகி கேரக்டரே கிடையாது என்பது ஆச்சர்யம்.. அதுமட்டுமல்ல, மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக இது தயாராகியுள்ளது.
இதன் தமிழ் வெர்ஷனில் பாண்டியராஜன், அவரது மகன் பிருத்வி, மொட்ட ராஜேந்திரன், பிளாக் பாண்டி உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளார்களாம். கமலின் 'உத்தம வில்லன்', வெளியாக இருக்கும் 'விஸ்வரூபம்-2' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஷாம்தத் ஷைனுதீன் என்கிற பிரபலமான ஒளிப்பதிவாளர்.. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.