டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அறம், கொலையுதிர்காலம், இமைக்கா நொடிகள், வேலைக்காரன் உள்பட பல படங்களில் நடித்து வரும் நயன்தாரா, தற்போது தெலுங்கிலும் பிசியாகி விட்டார். இந்த நிலையில், அவர் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்காக பல மாதங்களாக காத்திருந்தனர். ஆனால் சமீபத்தில் கால்சீட் கொடுத்து நடித்தார் நயன்தாரா. ஆனபோதும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளதாம். அந்தகாட்சிகள் அவருடன் விஜயசேதுபதி நடிக்கப்போகிறாராம்.
இதற்கு முன்பு நானும் ரெளடிதான் படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்த விஜயசேதுபதி இந்த படத்திலும் நயன்தாராவுக்கு ஜோடியாகத்தான் நடிக்கிறாராம். கதைப்படி, தற்போது ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து வரும் நயன்தாராவுக்கு, ஜோடியாக பிளாஷ்பேக்கில் வருகிறாராம் விஜயசேதுபதி. அப்போது அவருக்கும், நயன்தாராவுக்குமிடையே ஒரு பாடலும் இடம்பெறுகிறதாம். தற்போது கோகுல் இயக்கும் ஜுங்கா படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வரும் விஜய சேதுபதி அந்த படத்தில் நடித்து முடித்ததும் இமைக்கா நொடிகள் படத்தில் நடிக்க கால்சீட் கொடுத்திருக்கிறார்.