'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மற்ற மலையாள ஹீரோக்களின் வாரிசுகள் போல அல்லாமல், நடிகர் ஜெயராம், தனது மகன் காளிதாஸ் தமிழ் சினிமாவில் தான் அறிமுகமாகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் தான் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் 'ஒரு பக்க கதை' படத்தில் நடிக்க வைத்தார்.. ஆனால் அந்தப்படம் சென்சார் சிக்கல்களை கடந்து இப்போதுதான் இசை வெளியீட்டு விழா என்கிற கட்டத்தையே நெருங்கியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க மலையாளத்திலாவது நல்ல இடத்தை பிடிக்கலாம் என 'பூமரம்' என்கிற படத்தில் அறிமுகமானார் காளிதாஸ்.
இந்தப்படத்தை இயக்கியுள்ள அப்ரிட் ஷைன், நிவின்பாலியை வைத்து தொடர்ந்து இரண்டு நூறுநாள் ஹிட் படங்களை கொடுத்தவர்.. ஆனாலும் கடந்த வருட இறுதியிலேயே வெளியாகும் என சொல்லப்பட்ட 'பூமரம்' பூப்பதற்கான அறிகுறியே தென்படாமல் இருந்தது.. இந்தநிலையில் சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஜெயராம், 'பூமரம்' படம், வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீசாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.. இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன், மீரா ஜாஸ்மின் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு மொழிகளிலும் வெற்றிபெற்ற இயக்குனர்களின் படங்களில் தான் காளிதாஸ் நடித்துள்ளார் என்பதால் இந்தப்படங்களுக்கான வியாபார சிக்கல் எதுவும் இல்லையென்றே விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.