ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2008-ல் பேரரசு இயக்கத்தில் பரத் நடித்த பழனி படத்தில்தான் தமிழில் அறிமுகமானார் காஜல்அகர்வால். அதையடுத்து சரோஜா, பொம்மலாட்டம், நான் மகான் அல்ல என நடித்தவர் பின்னர் விஜய், அஜீத் போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடித்து முன்னணி நடிகையாகி விட்டார். அந்த வகையில், காஜல்அகர்வால் தமிழ் சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகளாகி விட்டது.
அவரது பத்தாவது ஆண்டில் அஜீத்தின் விவேகம், விஜய்யின் மெர்சல் படங்களில் நடித்துள்ளார். தற்போது குயின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடிக்கப்போகிறார். மேலும், தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்தபோதும், பல படங்களில் முக்கியத்துவம் இல்லாத கதாநாயகியாகத்தான் நடித்திருக்கிறார் காஜல்அகர்வால்.
இந்த நிலையில், தற்போது பாரிஸ் பாரிஸ் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிக்கும் அவர், தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு முதலிடம் கொடுக்கப்போவதாகவும் கூறி வருகிறார்.