ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உன் மேல ஒரு கண்ணு... என, பாடிய கீர்த்தி மீது, கோடம்பாக்கமே கண்ணாக சுற்றிக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம், தெலுங்கு படங்களுக்கு தான், முக்கியத்துவம் தருகிறார் என்ற குற்றச்சாட்டுடன், அவரை சந்திக்க சென்றபோது, மனம் திறந்து பேசினார்.
தமிழ் ரசிகர்களை மறந்து விட்டீர்களா?
அப்படி எல்லாம் இல்லை; தெலுங்கில், பவன் கல்யாண் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறேன். தமிழில் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விஷாலுடன், சண்டைகோழி - 2, விக்ரமுடன், சாமி - 2, தமிழ், தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகும் சாவித்ரி வாழ்க்கை வரலாறை சொல்லும் நடிகையர் திலகம் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். படப்பிடிப்புக்காக பல மாநிலங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அதனால், சென்னையில் தங்கும் நாட்கள் குறைந்துள்ளன, அவ்வளவு தான்.
சண்டைகோழி - 2, சாமி - 2 படங்கள் பற்றி?
லிங்குசாமி என்னிடம் கதை கூறியபோது, மீரா ஜாஸ்மின் நடித்த ரோலில், நம்மால் நடிக்க முடியுமா என பயந்தேன். இயக்குனர் தைரியம் கொடுத்து, நடிக்க வைத்தார். இதில், கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். நெகட்டிவ் ரோலில் வரலட்சுமி நடிக்கிறார். சாமி - 2 படத்தில், த்ரிஷாவுடன் நானும் நடிக்கிறேன். அந்நியன் படம் வந்தபோது, அதில், விக்ரம் நடிப்பை பார்த்து மிரண்டு போனேன். இப்போது, அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது; இது, எனக்கு நல்ல அனுபவமாக இருக்கும்.
உங்க குடும்பமே, இப்போது சினிமாவில் பிசியாக இருக்கீங்க போலிருக்கிறதே?
ஆமாம்; இப்போது எங்கள் வீட்டில் ஒரே போட்டி தான். அப்பா, சுரேஷ், சமீபத்தில், திலீப் நடித்த மலையாள படத்தில், அரசியல் கட்சி தலைவராக நடித்திருந்தார். அவரது நடிப்பு, கேரளாவில் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனால், பிசியான நடிகராகி விட்டார். என் பாட்டி சரோஜா, ரெமோ படத்தில் நடிச்சிருந்தாங்க; இப்போது, சாருஹாசனுடன் ஒரு படத்தில் நடிக்கிறாங்க. அக்கா ரேவதி, இயக்குனர் பிரியதர்ஷனின் நிமிர் படத்தில், உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். எதிர்காலத்தில், அக்கா, இயக்குனராகலாம்.
தெலுங்கு படங்களில், அதிகம் கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருக்குமே...
கண்டிப்பாக, கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். எத்தனை ஆண்டுகளானாலும், ஒருபோதும் கவர்ச்சிக்கு மாற மாட்டேன்.
உங்கள் மீதான விமர்சனங்கள் குறித்து...
மக்கள் ரசிக்கும் அளவுக்கு நடிக்க வேண்டும் என்பதற்காக, ரொம்ப மெனக்கெடுகிறேன். தொடரி படத்தில் என் நடிப்பு, சிலருக்கு பிடிக்கவில்லை, மீம்ஸ் போட்டு, பயங்கரமாக கலாய்த்தனர். அதெல்லாவற்றையும் கூர்ந்து கவனித்தேன். சமீபத்தில், என் உடல் எடை அதிகரித்து விட்டதாக விமர்சனம் வந்தது. இப்போது, கடுமையாக உடற்பயிற்சி செய்து, எடையை குறைத்து விட்டேன். அடுத்ததாக, என்ன விமர்சனம் வருமோ என, பயமாக இருக்கிறது.
சாவித்ரி ரோலில் நடிப்பது கொஞ்சம் சவாலாச்சே ?