விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
ஒரு நல்ல நாள் வந்தால் போதும், சினிமாக்காரர்கள் அவர்களது முதல் பார்வை, டீசர், டிரைலர் என அனைத்தையும் வெளியிட்டு சினிமா ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிடுவார்கள். அந்த விதத்தில் இந்த தீபாவளிக்கும் அப்படி சில விஷயங்கள் நடந்துள்ளன. இருந்தாலும் ஒரு சில படங்கள்தான் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருக்கின்றன.
அந்த விதத்தில் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்த நாளன்று 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் 'சொடக்கு' பாடல் டீசர் வெளியானது. மூன்று நாட்களில் 28 லட்சம் பார்வைகளையும், 1 லட்சம் லைக்குகளையும் இந்த டீசர் அள்ளியுள்ளது.
சூர்யாவின் போட்டியாளராகக் கருதப்படும் விக்ரம் நடித்துள்ள 'ஸ்கெட்ச்' படத்தின் டீசர் 17ம் தேதி வெளியானது. இந்த டீசருக்கு இரண்டு நாட்களில் 26 லட்சம் பார்வைகளும், 92 லட்சம் லைக்குகளும் கிடைத்துள்ளன.
சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்துள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் டிரைலரும் 17ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், இந்த டிரைலரை இதுவரை 12 லட்சம் பேர் மட்டுமே பார்த்துள்ளனர், வெறும் 30 ஆயிரம் லைக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. தெலுங்கில் 'காக்கி' என்ற பெயரில் வெளியாகியுள்ள இப்படத்தின் டிரைலருக்கு 10 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன.
தியேட்டர்களில் 'மெர்சல்' மற்ற போட்டிகளை பின்னுக்குத் தள்ளி முன்னேறிக் கொண்டிருக்க யு டியூபில் விக்ரம், சூர்யா, கார்த்தி ஆகிய படங்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.