Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மெர்சல்' தடைகள் ஏன், இப்போது புரிகிறதா ?

19 அக், 2017 - 15:07 IST
எழுத்தின் அளவு:
Now-cleared-why-mersal-met-Problem?

'மெர்சல்' படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வருமா என்ற சந்தேகம் செவ்வாய்க்கிழமை மதியம் திரைப்படத் தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கும் வரை இருந்தது. அவர்கள் சான்றிதழ் வழங்கிய பிறகே படத்திற்கான முன்பதிவு மும்முரமாக ஆரம்பமானது. படத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் காட்சிகள் கிராபிக்ஸ் மூலம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் அளிக்கப்படவில்லை என விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்ததே அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. அது அதிகாரப்பூர்வமான காரணம்.

ஆனால், படத்தைப் பார்த்த பலருக்கும் 'மெர்சல்' படத்திற்கு ஏன் தடைகள் என்பதற்கான காரணத்தை நேற்று புரிந்து கொண்டிருப்பார்கள். படத்தின் ஆரம்பத்தில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தைப் பற்றி வடிவேலு கிண்டலடித்துப் பேசுகிறார். அதோடு படத்தின் கிளைமாக்சில் '8 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூரில் மக்களுக்கு இலவச மருத்துவம் கொடுக்கும் போது, 28 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் இந்தியாவில் இலவச மருத்துவம் கொடுக்க முடியாதா,” என மக்களைப் பார்த்து கேள்வி கேட்கிறார்.

மேலே குறிப்பிட்ட இந்த இரண்டு காட்சிகளுக்கும் தியேட்டரில் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். இப்போது இந்த இரண்டு காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். 'மெர்சல்' விவகாரம் படம் வெளிவந்த பிறகும் நீளும் என்றே தோன்றுகிறது.

Advertisement
டிக்கெட் கட்டணங்களை உயர்த்தாத மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள்டிக்கெட் கட்டணங்களை உயர்த்தாத ... யு டியூபில் தீபாவளி டீசர், டிரைலர் போட்டிகள் யு டியூபில் தீபாவளி டீசர், டிரைலர் ...


வாசகர் கருத்து (22)

S PANDIYAN - PARIS,பிரான்ஸ்
20 அக், 2017 - 15:01 Report Abuse
S PANDIYAN உண்மையை தானே சொல்கிறார். பொய்யை சொன்னால் தானே எதிர்க்கலாம். பி ஜெ பி யினரின் தோல்வி பயம் கண்ணில் தெரிகிறது
Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
20 அக், 2017 - 14:50 Report Abuse
Vaithilingam Ahilathirunayagam அடுத்த கேள்வி, பா ஜ கா தமிழகத்தில் வேரூன்றுமா ?
Rate this:
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
20 அக், 2017 - 13:32 Report Abuse
Raman Muthuswamy சும்மா இருக்கிற யாழை தமிழில் இசைக்கப் பார்க்கிறார் அம்மணி .. இந்த பாச்சா எல்லாம் பலிக்காதுங்கோ .. புதுசா படிச்சிட்டு வாங்கோ .. அப்புறம் பார்க்கலாம் ..
Rate this:
20 அக், 2017 - 10:27 Report Abuse
தேசநேசன்  ஜி எஸ் டி ஐக்  கொண்டு வந்தது நிறைவேற்றியது அனைத்துக் கட்சி மாநில அரசாங்கங்கமும் தான். இன்றும்  ஜி எஸ் டி விதிகளையும் வரிவிகிதங்களையும் நிர்ணயிப்பதில் மெஜாரிட்டி மாநில அரசுகளின் பிரதிநிதிகள்தான். ஏழைகள் அன்றாடம் பயன்படுத்தும் பிராண்டு பெயரற்ற பொருட்களில் கிட்டத்தட்ட எல்லாமே ஜி எஸ் டி  வரியற்றவை. ஆடம்பரப்பொருட்களுக்கு மட்டுமே 28 % வரி. இதெல்லாம் நடிகர் ஜோசப் விஜய்க்குத் தெரியாமலிருக்காது. என்ன செய்ய? தன்மானமுள்ள இந்துக்கள் அதிகமாகவுள்ள மத்திய அரசை வெறுக்கும் அந்நிய என் ஜி ஓக்களின் பிடியிலிருப்பவர்கள் வேறெப்படி பேசுவார்கள்? அறிந்தே உள்நோக்கத்துடன் தவறான கருத்துக்களை பரப்புபவர்களை எந்த கர்த்தரும் மன்னிக்கமாட்டார்.
Rate this:
20 அக், 2017 - 08:15 Report Abuse
Kalyanaraman அசிங்கப்பட்டான்டா அட்லீ. கூடவே இளைய தளபதிலேர்ந்து வெறும் தளபதியா ப்ரமோஷன்? வாங்கிக்கிட்ட ஜோசப் விஜயும் தான்.
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mannar Vagaiyara
  • மன்னர் வகையறா
  • நடிகர் : விமல்
  • நடிகை : ஆனந்தி
  • இயக்குனர் :பூபதி பாண்டியன்
  Tamil New Film Iravukku Aayiram Kangal
  Tamil New Film Seyaal Movie
  • செயல்
  • இயக்குனர் :ரவி அப்புலு
  Tamil New Film Kombu
  • கொம்பு
  • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
  • நடிகை : திஷா பாண்டே
  • இயக்குனர் :இ. இப்ராகிம்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in