ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷா. தடகள போட்டியில் சாதித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது பி.டி.உஷா தன் கணவருடன் இணைந்து தடகள பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரது வாழ்க்கை சினிமாவாக தயாராக இருக்கிறது.
மில்கா சிங், மேரிகோம், டோனி, அசாருதீன். சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வாழ்க்கை ஏற்கெனவே சினிமாவாகியிருக்கிறது. பேட்மிட்டன் வீராங்கணைகள், சாய்னா, சிந்து ஆகியோரின் வாழ்கை சினிமாவாகி வருகிறது. இந்த வரிசையில் இப்போது பி.டி.உஷாவின் வாழ்க்கையும் சினிமாவாகிறது. ஜோதிகா, குஷ்பு, சரிதா நடித்த ஜூன் ஆர் என்ற படத்தை தமிழில் இயக்கிய ரேவதி வர்மா இதனை இயக்கித் தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே சில மலையாள படங்களை இயக்கி உள்ளார்.
பி.டி.உஷாவின் வாழ்க்கை மலையாளம், தமிழ், இந்தி மொழிகளில் தயாராகிறது. இதற்கு பி.டி.உஷாவும் ஒப்புதல் அளித்து விட்டார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். பி.டி.உஷா கேரக்டரில் நடிக்க அவரைப்போன்ற தோற்றம் கொண்ட பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.