ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ஹர ஹர மகா தேவகி பாடலில் நடனமாடிய ராய்லட்சுமி, அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை. ஆனால் இந்தி, மலையாள படங்களில் பிசியாகி விட்டார். அந்த வகையில், இந்தியில் தீபக் இயக்கியுள்ள ஜூலி-2 படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் ராய்லட்சுமி.
மேலும், நவம்பர் 10-ந்தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு படுகவர்ச்சியாக நடித்துள்ளார் ராய்லட்சுமி. இந்த படத்தின் போஸ்டர், டீசர் என வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
இந்நிலையில் தனது இணைய பக்கத்தில், ஆக்ஷ்ன் காட்சியின் போது எனது கால் முட்டியில் அடிபட்டு விட்டது. ஆனால் தற்போது நலமாகி விட்டேன் என்று சொல்லி அந்த போட்டோவை வெளியிட்டிருக்கிறார் ராய்லட்சுமி.