ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
விஜய், பிரியங்கா சோப்ரா நடித்த தமிழன் படத்தை இயக்கியவர் மஜித். 'தமிழன்' படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததினால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்பட்ட மஜித், பல வருட போராட்டத்துக்குப் பிறகு 'துணிச்சல்' என்ற படத்தை இயக்கினார். தொடர்ந்து, சமீபத்தில் வெளியான 'பைசா' படத்தை இயக்கினார்.
இந்தப் படங்களை அடுத்து மஜித் இயக்கும் படம் 'டார்ச்லைட்'. இந்த படம் பாலியல் தொழிலாளிகளை பற்றிய கதையாம். பாலியல் தொழிலாளிகள் பற்றி அதிகமாக இதுவரை யாரும் சொல்லாத பல விஷயங்களை இப்படத்தில் சொல்கிறாராம் இயக்குநர் மஜித். இந்தப்படத்தில் பாலியல் தொழிலாளிகளாக சதா, ரித்திவிகா ஆகியோர் நடிக்கின்றனர்.
வடிவேலுவுடன் நடித்த தெனாலிராமன் படத்துக்குப் பிறகு பெரிய இடைவெளிக்கு பிறகு சதா இப்படத்தில் நடிக்கிறார். டார்ச்லைட் படத்திர் சதாவின் கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதாம்.