ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு சினிமாவின் ரவிதேஜா ஹீரோவாக நடித்துள்ள 'ராஜா தி கிரேட்' படம் தீபாவளிக்கு திரைக்கு வர தயாராகிவிட்டது. சமீபத்தில் இந்தப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி என்பவர் இயக்கியுள்ளார்.
ரவிதேஜா பார்வையற்றவராக நடிக்கிறார். ஆக்சன் மற்றும் காமெடி கலந்து உருவாகியுள்ள இந்தப்படம் 'பிளைண்ட் டிடெக்டிவ்' என்கிற படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கதாநாயகியாக மெஹ்ரீன் கவுர் நடிக்கிறார். இந்தப்படத்தில் முக்கிய வேடங்களில் பிரகாஷ்ராஜ், சம்பத்ராஜ் மற்றும் ராதிகா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ராதிகாவுக்கு போலீஸ் அதிகாரி வேடம். கிட்டத்தட்ட 18 வருடங்கள் கழித்து இந்தப்படத்தின் மூலம் மீண்டும் தெலுங்கில் கால்பதிக்கிறார் ராதிகா.
தில் ராஜூ தயாரித்துள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சில மாதங்களுக்கு முன் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கிய ரவிதேஜாவுக்கு இந்தப்படம் ஒரு ஆசுவாசம் தருமா என்பது தீபாவளியன்று தெரிந்துவிடும்.