சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பாகுபலி நாயகன் பிரபாஸ் தற்போது நடித்து வரும் சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருபவர் ஸ்ரத்தா கபூர். ஹிந்தியில் பல ஹிட் படங்களில் நடித்துள்ள இவர், பல படங்களில் பின்னணி பாடியிருப்பதோடு, சில படங்களில் பாடலும் எழுதியிருக்கிறார். இப்போது இந்த சாஹோ படம் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழி நடிகையாக உருவெடுத்துள்ளார் ஸ்ரத்தா கபூர்.
மேலும், தற்போது சாஹோ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்துள்ள ஸ்ரத்தா கபூர், தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பவர், தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். ஆனால் பட்டாசு வெடித்து புகை மண்டலத்தை உருவாக்காதீர்கள். அது, அனைத்து உயிர்களுக்கும் கேடு விளைக்கும் என்று தெரிவித்துள்ளார்.