பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் என்றால் அது ஓவியா தான். அதனால் அவரை வைத்து படம் எடுக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் கிடைத்த பாப்புலாரிட்டியை தொடர்ந்து ஒவியாவுக்கு விளம்பர படங்கள், திரைப்படங்கள் என குவிந்து வருகின்றன.
இந்நிலையில் ஓவியாவையும் பிக்பாஸ் ரன்னரான சினேகனையும் வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளனர். இந்தப் படத்தை இசை அமைப்பாளர் சி.சத்யா தயாரிக்க இருக்கிறார். இதுவரை இசை அமைப்பாளராக இருந்து வந்த சத்யா இந்த படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராகிறார்.
இந்த படத்தை இயக்குவது யார், இதில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் சினேகனுக்கு ஜோடியாக ஓவியா நடிக்கவில்லை என்று அவரது மானேஜர் மறுத்து வருகிறார்.