மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட்டில் இப்போது அனைவரும் காண ஆவலாக இருக்கும் படம் பத்மாவதி. முகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜி. சித்தூர் ராணி பத்மாவதி மீது கொண்ட காதலை மையமாக கொண்டு உருவாகும் படம். ஏற்கெனவே சித்தூர் மகராணி பற்றிய நாவல்களும், கதைகளும், படங்களும் வெளிவந்திருக்கிறது. ஆனால் அவைகள் அவரது வீரத்தை மட்டுமே காட்டியது. இதில், அவரது காதல் பேசப்படுகிறது. அதுவும் இந்து மதத்தை சேர்ந்த மகராணியை இஸ்லாமிய மன்னன் காதலித்த கதை. அதனால் பரபரப்புக்கு பஞ்சமா இருக்கப்போகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் ஹிருத்திக் ரோஷன், பர்ஹான் அக்தர், அமிதாப்பசன் உள்ளிட்ட பலர் பாராட்டி தள்ளியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சரித்திர கதை மன்னன் எஸ்.எஸ்.ராஜமவுலி "இந்த டிரைலர் என்னை பித்து பிடிக்க வைத்திருக்கிறது" என்ற பாராட்டித் தள்ளியிருக்கிறார்.
பாஜிராவ் மஸ்தானி படத்தின் மூலம் பெரிய சரித்திர தாக்கத்தை ஏற்படுத்திய சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ள இந்தப் படத்தில் ராணி பத்மாவதியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். முகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங் நடிக்கிறார். இவர்கள் தவிர சாகித் கபூர், அதிதிராவ், ஜிம் சர்ப் உள்பட பலர் நடித்துள்ளனர். சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். சஞ்சித் பஹாரா பின்னணி இசை அமைத்துள்ளார். இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி பாடல்கள் எழுதி இசை அமைத்துள்ளார். தயாரிப்பாளரும் அவரே. வருகிற டிசம்பர் 1ந் தேதி வெளிவருகிறது.