ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது வேகமாக வளர்ந்து வரும் பாடலாசிரியர் அருண் பாரதி. துணை முதல்வர் படத்தின் மூலம் கே.பாக்யராஜ் இவரை அறிமுகப்படுத்தினார். தற்போது அருண் பாரதி, விஜய் ஆண்டனி நடித்து இசை அமைக்கும் அண்ணாதுரை படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கும் காளி, லிங்குசாமி இயக்கும் சண்டக்கோழி 2 உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார்.
"எனது சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள உத்தம பாளையம். என் மனைவி பத்மாவதி ஒரு எழுத்தாளர். நான் சின்னத்திரை சீரியல்களுக்கு வசனம் எழுதி வருகிறேன். சினிமாவில் பாடலாசிரியராக வேண்டும் என்பது என் ஆசை. கே.பாக்ரயராஜ் சார் என்னை அறிமுகப்படுத்தினார். அண்ணாத்துரை படத்தில் ஒரு பாடல் எழுதத்தான் சென்றேன். அந்த பாடலை படித்துவிட்டு பிடித்துப்போன விஜய் ஆண்டனி சார் அனைத்து பாடல்களையும் எழுத வாய்ப்பு கொடுத்தார்.
புதிய பாணியில் நல்ல பாடல்களை தரவேண்டும் என்பதே என் விருப்பம். புதிய பானையில் பழைய சோறு என்ற கவிதை தொகுப்பை சமீபத்தில் வெளியிட்டேன். அதில் லிங்குசாமி, பாரதிராஜா, கே.பாக்யராஜ், பாண்டிராஜ், சற்குணம், உள்பட பல முன்னணி இயக்குனர்கள் கலந்து கொண்டார்கள். எனது கவிதை தொகுப்பை படித்து விட்டு எனக்கு வாய்ப்பு தருகிறார்கள்" என்கிறார் அருண் பாரதி.