கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் |
நடிகர் விஜய், தமிழக முதல்வர் பழனிசாமியை இன்று (அக்.,15) திடீரென சந்தித்து பேசி உள்ளார்.
சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற விஜய், முதல்வரை சந்தித்து பேசி உள்ளார். தியேட்டர் கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்ததற்காக முதல்வரை நேரில் சந்தித்து, விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இதே போன்று கேளிக்கை வரியை 8 சதவீதமாக குறைத்ததற்கும் முதல்வருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
முதல்வருடனான விஜயின் சந்திப்பின் போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடன் இருந்தார். தீபாவளிக்கு விஜய் நடித்த மெர்சல் படம் ரிலீசாக உள்ள நிலையில், அவர் இன்று முதல்வரை சந்தித்து பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.