நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ரஜினி நடித்த லிங்கா படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் அதன்பிறகு கன்னட நடிகரான நான்ஈ சுதீப்பை நாயகனாக வைத்து முடிஞ்சா இவனை புடி என்ற படத்தை தமிழ், கன்னடத்தில் இயக்கினார். அதையடுத்து தங்கமகன், றெக்க, ரெமோ என பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர் தற்போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்றபோதும், கர்ணன், ஜெயசிம்ஹா போன்ற தலைப்புகளில் ஒன்றை வைப்பதற்கு பரிசீலித்து வருகிறார்கள். இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கும் நிலையில், அவரைத் தொடர்ந்து இன்னொரு மலையாள நடிகை நடாஷா கமிட்டானார். தற்போது மூன்றாவதாக தெலுங்கு நடிகை ஹரிப்பிரியாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பக்கா கமர்சியல் கதையில் உருவாகும் இந்த படத்தில் கிளாமரை தூக்கலாக வைத்திருப்பதே இத்தனை நாயகிகளி நடிப்பதற்கு காரணமாம்.