பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள மெர்சல் படத்தின் டீசர் கடந்த மாதம் 21ம் தேதி யு டியூபில் வெளியானது. டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே பல புதிய சாதனைகளைப் படைத்தது.
உலக அளவில் அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற சாதனையைப் புரிந்திருந்த விவேகம் டீசரின் சாதனையை சில மணி நேரங்களில் மெர்சல் டீசர் முறியடித்தது. தொடர்ந்து மெர்சல் டீசரின் லைக்குகள் அதிகரித்துக் கொண்டேயிருந்தன. இப்போது 10 லட்சம் லைக்குகளைப் பெற்று, மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதுவரை மெர்சல் டீசருக்கு 2 கோடியே 87 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது. இன்னும் 13 லட்சம் பார்வைகள் கிடைத்தால் 3 கோடி பார்வைகள் கிடைத்துவிடும்.
உலக அளவில் 10 லட்சம் லைக்குகளைத் தொட்ட முதல் திரைப்பட டீசர் என்ற பெருமை மெர்சல் டீசருக்குக் கிடைத்துள்ளது. வரும் 18ம் தேதி மெர்சல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.