தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மெர்சல் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணுவதற்காக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒரு பக்கம் இந்தப்படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாமல் இருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க, கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 'மெர்சல்' படத்தை பிரமாண்டமாக ரிலீஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது இந்தப்படத்தின் கேரளா விநியோக உரிமையை கைப்பற்றியுள்ள குளோபல் மீடியா நிறுவனம்.. இந்த நிறுவனம் தான் கேரளாவில் 'பாகுபலி-2' படத்தை வெளியிட்டது..
'மெர்சல்' படத்தின் பப்ளிசிட்டியின் ஒரு பகுதியாக சி.சி.எல் கிரிக்கெட் போட்டி அணிகளில் ஒன்றான கேரள ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் ஜெர்ஸி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.. விஜய்யின் 'மெர்சல்' பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் அந்த ஜெர்ஸியில் அச்சிடப்பட்டிருந்தது. இதன்மூலம் மெர்சல்' படத்தின் பப்ளிசிட்டி எல்லையை விரிவுபடுத்தியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 3300 தியேட்டர்களில் வெளியாக இருக்கும் மெர்சல் திரைப்படத்திற்கு கேரளாவில் மட்டுமே 400 தியேட்டர்களுக்கு குறையாமல் கைப்பற்றும் வேலைகளும் நடந்து வருகின்றன.