மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த அர்ஜூன் ரெட்டி படத்தில் நாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே. தற்போது தமிழ், தெலுங்கி தயாராகி வரும் மகாநதி உள்பட மூன்று தெலுங்கு படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அதோடு, 100 % லவ் படத்தின் தமிழ் ரீமேக்கான 100 % காதல் படத்திலும் ஜி.வி.பிரகாசுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஷாலினி பாண்டே.
ஆக, ஒரேயொரு ஹிட் படம் கொடுத்து ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார் ஷாலினி பாண்டே. ஜி.வி.பிரகாசுடன் அவர் நடிக்கும் 100 % காதல் படத்தின் தெலுங்குப்பதிப்பில் நாகசைதன்யா-தமன்னா நடித்திருந்தனர்.
இதுபற்றி ஷாலினி பாண்டே கூறுகையில், தமன்னா எனக்கு பிடித்தமான நடிகை. 100 % லவ் படத்தில் அவர் நடித்த வேடத்தில்தான் இப்போது நான் நடிக்கிறேன். என்றாலும், அவரது சாயல் எனது நடிப்பில் வராத வகையில் எனக்கென்று ஒரு தனி பாணி வைத்துதான் இந்த படத்தில் நடிப்பேன்.
முக்கியமாக, அர்ஜூன் ரெட்டி படத்தில் எனக்கு நிறைய தெலுங்கு ரசிகர்கள் கிடைத்தது போன்று இந்த 100 % காதல் படத்தின் மூலம் தமிழிலும் நிறைய ரசிகர்களை கவர்ந்து விடுவேன் என்கிறார் ஷாலினி பாண்டே.