ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
பாபநாசம், தூங்காவனம் படங்களைத் தொடர்ந்து சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வந்தார் கமல்ஹாசன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளில் அப்படம் தயாராகி வந்தது. ஆனால் அந்த படத்தில் நடித்து வந்தபோது கமலின் காலில் அடிபட்டதால் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த கமல், அடுத்தபடியாக ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடிக்கிறார். ஆனால், அந்த படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே சபாஷ் நாயுடு படத்தை ரிலீஸ் பண்ணி விட வேண்டும் என்று நினைக்கிறாராம். தற்போது தனது கால் பூரண குணமடைந்து விட்டதால் விரைவில் சபாஷ்நாயுடு படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம் கமல்.