Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னை, ஐதராபாத்தில் சமந்தா திருமண வரவேற்பு?

13 அக், 2017 - 16:46 IST
எழுத்தின் அளவு:
Samantha---Nagachaitanya-wedding-reception-in-Chennai-and-Hyderabad

நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா இருவருக்கும் கடந்த வாரம் கோவாவில் திருமணம் நடைபெற்றது. இருதரப்பினரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என சுமார் 100 பேர் மட்டுமே அந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டனர். இந்து, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. அதன்பின் மணமக்கள் ஐதராபாத்தில் உள்ள நாகார்ஜுனா வீட்டிற்குச் சென்றதாகத் தகவல்.

சமந்தா, நாகசைதன்யா இருவருமே தெலுங்குத் திரையுலகத்தில் பிரபலமானவர்கள், நாகசைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா, அவருடைய தாத்தா மறைந்த நாகேஸ்வரராவ் ஆகியோர் தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய புள்ளிகள். அவர்களது 'அக்கினேனி' குடும்பத்திற்கு தெலுங்குத் திரையுலகில் தனிப் பெயர் உண்டு. ஆனாலும், நாகார்ஜுனா அவருடைய மகன் நாகசைதன்யாவின் திருமண வரவேற்பை இன்னும் நடத்தவில்லை என தெலுங்குத் திரையுலகத்தில் ஒரு பேச்சு எழுந்துள்ளது.

நாகசைதன்யாவின் அம்மா லட்சுமி, கணவர் நாகார்ஜுனாவை விவகாரத்து செய்தவர், வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வருகிறார். தன் மகன் நாகசைதன்யாவின் திருமண வரவேற்பை அவர் சென்னையில் நடத்த உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. லட்சுமி, பிரபல தெலுங்கு படத் தயாரிப்பாளர் ராமா நாயுடுவின் மகளும், நடிகர் வெங்கடேஷின் சகோதரியும் ஆவார்.

இந்த திருமண வரவேற்பில் லட்சுமி குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொள்கிறார்களாம். சென்னையில் இந்த திருமண வரவேற்பு முடிந்த பிறகே நாகார்ஜுனா ஐதராபாத்தில் நாகசைதன்யா - சமந்தா திருமண வரவேற்பை நடத்த உள்ளாராம். இந்த மாதத்திற்குள் சென்னை, ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நடக்கும் எனத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in