Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கூடுதல் கட்டணம் விற்கப்படாது : தியேட்டர் உரிமையாளர்கள் உறுதி

13 அக், 2017 - 15:27 IST
எழுத்தின் அளவு:
Extra-rate-cant-collect-:-TN-Theatre-owners-sure

கேளிக்கை வரி தொடர்பாக தமிழ் திரையுலகினர் அரசுடன் மூன்றாவது நாளாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கூட்டத்தின் முடிவில் 2 சதவீதம் கேளிக்கை வரியை குறைக்க அரசு சம்மதம் தெரிவித்தது. திரையுலகினரும் அதை ஏற்று கொண்டனர். இனி அரசு நிர்ணயித்த தியேட்டர் கட்டணத்துடன் 28 சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் 8 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.

அரசு உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அபிராமி ராமநாதன் உள்ளிட்ட தியேட்டர் உரிமையாளர்கள்...

இனி அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே சினிமா டிக்கெட் விற்கப்படும். எப்படிப்பட்ட பெரிய நடிகரின் படம் என்றாலும் ஒரு ரூபாய் கூட அதிகம் வசூலிக்கப்படாது. அதேப்போன்று தின்பண்டங்ளும் எம்ஆர்பி விலைக்கே விற்கப்படும். பார்க்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம் உள்ளிட்டவைகள் குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் நாளை சந்தித்து ஆலோசனை நடத்தி ஒரு நல்ல முடிவு எடுப்போம். தியேட்டர்களில் அம்மா குடிநீர் விற்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்கள். மேலும் தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர்களின் சம்பளத்தையும், தயாரிப்பு செலவையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்.

Advertisement
30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மை டியர் லிசா30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மை ... அனிருத் பிறந்த நாளில் தானா சேர்ந்த கூட்டம் சிங்கிள் டிராக் அனிருத் பிறந்த நாளில் தானா சேர்ந்த ...


வாசகர் கருத்து (1)

BMV - kallai,இந்தியா
13 அக், 2017 - 15:52 Report Abuse
BMV நாளை முதல் 4 முன்னணி நடிகர்களும் 100 நாள் வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அரசு நிர்ணயித்த சம்பளத்தை வாங்குவார்கள். போங்கடா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
    Tamil New Film Junga
    • ஜூங்கா
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :கோகுல்
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in