மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
1987-ல் 'மை டியர் லிசா' என்ற பெயரில் ஒரு ஹாரர் படம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மலையாளத்தில் உருவான இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டது. ஆனால் நேரடி தமிழ்ப்படம்போல் வெளியானது. அன்றைய காலகட்டத்தில் 'மை டியர் லிசா' படம்தான் ஹாரர் படத்தின் உச்சம் என பேசப்பட்டது.
ஏறக்குறைய 30 வருடங்களுக்குப் பிறகு இப்போது அதே பெயரில் ஒரு ஹாரர் படம் உருவாகிறது. தற்போது தயாராக உள்ள 'மை டியர் லிசா' படத்தில் விஜய் வசந்த் ஹீரோவாக நடிக்கிறார். இளம் தொழில் அதிபரான விஜய் வசந்த். வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை - 600028' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர்.
இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்தார் விஜய் வசந்த். என்னமோ நடக்குது படம் அவருக்கு நல்ல பெயரைத் தேடிக் கொடுத்தது. இந்நிலையில்தான் அடுத்து 'மை டியர் லிசா' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஞ்சன் கிருஷ்ணதேவன் இயக்கும் இந்த படத்தில் விஜய் வசந்துக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார்.