டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'சதுரங்கவேட்டை2, 'கர்ஜனை', 'மோகினி' மற்றும் மலையாளத்தில் 'ரெடி ஜூட்' ஆகிய படங்களில் த்ரிஷா நடித்து முடித்துள்ளார். பல மாதங்களாக வெளிவராமல் உள்ள இந்தப் படங்கள் விரைவில் அடுத்தடுத்து ரிலீசாகவிருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளில் த்ரிஷாவே ஈடுபட்டிருக்கிறார்.
இந்நிலையில் இப்போது த்ரிஷா 96 என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும்நிலையில் இருக்கிறது.
இந்த படத்தை அடுத்து அறிமுக இயக்குனர் திருஞானம் என்பவர் இயக்கி, தயாரிக்கும் 'பரமபதம்' என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் த்ரிஷா.
இந்த படத்தில் த்ரிஷாவுக்கு டாக்டர் வேடம். ஏற்கெனவே விஷ்ணுவர்தன் இயக்கிய 'சர்வம்' படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்திருக்கிறார் த்ரிஷா.
சர்வம் படத்தை தொடர்ந்து 'பரமபதம்' படத்தில் மீண்டும் டாக்டர் வேடமேற்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிக விரைவில் வெளியாகவிருக்கிறது. தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 20-ஆம் தேதி துவங்கவிருக்கிறது.