பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அஜித் நடித்த வேதாளம் படத்துக்கு டிரைலர் வெளியிடப்படவே இல்லை. வேதாளம் டிரைலருக்காக அஜித் உடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். டிரைலர் ரெடி பண்ண நேரமில்லை என்று டைரக்டர் சிவா சொல்லிவிட்டதால் கடைசிவரை வேதாளம் டிரைலர் வெளிவரவே இல்லை. இதே சூழ்நிலை இப்போது மெர்சல் டிரைலர் விஷயத்திலும் நடந்தேறியுள்ளது.
தீபாவளியை ஒட்டி வருகிற 18-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது 'மெர்சல்'. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீஸருக்கு விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி மெர்சல் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர் ரசிகர்கள்.
அவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக 'மெர்சல்' டிரெய்லர் வராது என்பதை இயக்குநர் அட்லி அறிவித்துள்ளார். மெர்சல் படத்தின் காப்பியை ரெடி பண்ண தாமதமாகி விட்டதால் டிரைலர் உருவாக்க நேரமில்லையாம்.