'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் - 'அர்ஜுன் ரெட்டி'. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த ஷாலினி பாண்டேவுக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் தேடிக்கொடுத்திருக்கிறது 'அர்ஜுன் ரெட்டி'. தெலுங்கில் அரை டஜன் படங்களில் கமிட்டாகியுள்ள ஷாலினி பாண்டே, தமிழில் ஜி.வி.பிரகாஷுடன் '100% காதல்' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், நடிகை சாவித்திரியின் பயோபிக்கான மகாநதி படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் ஷாலினி பாண்டே நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு சினிமாவில் ஒரு காலத்தில் நடிகையர் திலகமாக கோலோச்சியவர் நடிகை சாவித்திரி. இவரது வாழ்க்கை வரலாறு தற்போது 'மகாநதி' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான், சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ், மற்றும் பிரகாஷ் ராஜ், சமந்தா ஆகியோரும் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். லேட்டஸ்ட் இணைப்பாக 'மகாநதி' படத்தில் ஷாலினி பாண்டே இணைந்துள்ளார். அவரது நடிப்பில் வெளியாகும் இரண்டாவது தமிழ்ப்படமாக 'மகாநதி' இருக்கும்.