வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
பாலிவுட் நடிகரான சல்மான் கான் தன்னுடைய படங்களை ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகை நாட்களில் ரிலீஸ் பண்ண வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். அவர் நடித்த பல படங்கள் இதுபோன்ற பண்டிகைகளில் வெளியாகியுள்ளன.
சல்மான் கான் பாணிக்கு விக்ரமும் மாறிவிட்டார். விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம் ஸ்கெட்ச். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளி அன்று டீஸர் வெளியீடு, அதனைத் தொடர்ந்து இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு திட்டமிட்டுள்ளனர்.
ஸ்கெட்ச் படத்தின் ரிலீஸ் தேதியை மட்டும் முடிவு பண்ணாமல் இருந்தனர். இந்நிலையில் ஸ்கெட்ச் படத்தை கிறிஸ்துமஸ் தின விடுமுறையில் வெளியிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்த விக்ரம், அதை தயாரிப்பாளர்களை அழைத்தும் சொல்லி இருக்கிறார். விக்ரம் பேச்சை தட்ட முடியாததால் ஸ்கெட்ச் படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிடமுடிவு செய்துள்ளனர்.