மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
2011-ம் ஆண்டு நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 100% லவ். சுகுமார் இயக்கத்தில், கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தெலுங்கில் வரவேற்பைப் பெற்ற 100% லவ் படம், தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.
100% லவ் படத்தின் இயக்குநரான சுகுமார் தமிழில் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகனாக நடித்து, இசையமைக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இதில் கதாநாயகியாக அர்ஜுன் ரெட்டி படத்தின் நாயகியான ஷாலினி பாண்டே நடிக்கிறார். எம்.எம்.சந்திரமெளலி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். ஒளிப்பதிவாளராக டட்லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
100% காதல் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 11 முதல் சென்னையில் தொடங்கப்பட்டிருக்கிறது. நாச்சியார், அடங்காதே, செம ஆகிய படங்களை முடித்துள்ள ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது 100% காதல் படத்தின் படப்பிடிப்பில் பிசியாகியுள்ளார். இந்தப் படத்துக்காக மஷ்ரூம் கட் அடித்து தன்னுடைய ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார்.
2018 கோடை விடுமுறைக்கு 100% காதல் படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல் அடிபடுகிறது.